முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

டி.இ.டி.: 1,716 பேருக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

ஜூலையில் நடந்த டி.இ.டி.,தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 1,716 பேர், புதிய விதிமுறைகளின்படி தேர்வுசெய்ய இருப்பதால், அவர்களுக்கு,இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
டி.இ.டி., முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள், தற்போதுள்ள நடைமுறை விதிகளின்படி, வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமைஅடிப்படையில், இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு, தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு பதிவை பதிவு செய்துள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில், இம்மாதம், 31ம் தேதி ஆஜராகி, வேலைவாய்ப்பு பதிவு அட்டையின், சான்றொப்பமிட்ட இரு நகல்களை, சமர்ப்பிக்க வேண்டும்.சான்றிதழ் சரிபார்த்தலுக்காக அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தின் நகலையும், "ஹால் டிக்கெட்&' நகலையும், எடுத்துச்செல்ல வேண்டும். இவ்வாறு, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.ஆசிரியர் தேர்வுக்கான புதிய விதிமுறையின்படி, டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண்கள்,"வெயிட்டேஜ்&' அடிப்படையில், 60 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படுகிறது. அதோடு, பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் கல்விபட்டயத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், வெயிட்டேஜ் அடிப்படையில், 40 மதிப்பெண்களுக்கும் கணக்கிட்டு, 100 மதிப்பெண்களுக்கு, தேர்வர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், தேர்வு செய்யப்படுவர்.அதன்படி, இடைநிலை ஆசிரியரைப் பொறுத்தவரை, பிளஸ் 2க்கு, 15, ஆசிரியர் கல்வி பட்டய படிப்பிற்கு, 25 மற்றும் டி.இ.டி., தேர்வில், 60 என, 100 மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.இதனால், பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வில், 1,716 பேர் பெற்ற மதிப்பெண் விவரங்களை ஊர்ஜிதப்படுத்தவும், சான்றிதழ்நகல்களை பெறவும், இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் வருமாறு, டி.ஆர்.பி., அழைப்பு விடுத்துள்ளது. பட்டதாரி ஆசிரியருக்கான அறிவிப்பு, இன்று வெளியாகும் என தெரிகிறது.