முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

மேலும் 3 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிகல்வி துறை அமைச்சர் -சிவபதி

  திருச்சியில் நடந்த முதுகலை ஆசிரியர் நியமனத்திற்கான நியமன கலந்தாய்வு நடந்தது. இதில் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் பதிவு மூப்பு அடிப்படையில் மாநில அளவில் 1080 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி இடங்களுக்கான நியமனத்திற்கான கலந்தாய்வு நடந்தது. இதில்‌ நேற்று 397 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இன்று திருச்சியில் முன்முறையாக ஆன்லைன் வாயிலாக அந்தந்த மாவட்டங்களுக்கான இடங்களுக்கு 683 பேர் உத்தரவு பெற்றனர். இதற்கான பணிநியமன ஆணையினை அமைச்சர் சிவபதி , வழங்கினார். 
 
   இந்நிகழ்ச்சியில் பள்ளிகல்வித்துறை இயக்குனர் தேவராஜன், துணை இயக்கனர் உமா உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.பின்னர் அமைச்சர் சிவபதி பேசுகையில், ‌உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் 100 சதவீதி தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும். மேலும் 3 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுகளில் 59 ஆயிரம் பணியிடங்களில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்பட்டனர். இதற்காக ரூ. 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்றார்