முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

ஆங்கில இலக்கியம் - நடைமுறை ஆங்கிலம் சமமானதே: ஐகோர்ட் உத்தரவு


   பி.ஏ., நடைமுறை ஆங்கிலம் மற்றும் ஆங்கில இலக்கிய பாடங்களை வேறுபடுத்தி பார்க்கக்கூடாது எனவும், நடைமுறை ஆங்கிலம் படித்தவர்களுக்கு பட்டதாரி உதவி ஆசிரியர் பணி வழங்க வேண்டும் எனவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.



  திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர்கள் செல்லத்தாய், அனுராதா. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், 2004 ல் செல்லத்தாயும், 2005 ல் அனுராதாவும் பி.ஏ.,நடைமுறை ஆங்கிலம் (Functional English) தேர்ச்சி பெற்றனர். வேறு பல்கலையில் 2010 ல் பி.எட்.,தேர்ச்சி பெற்றனர். 2009-10 ல், பட்டதாரி உதவி ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கு இருவரின் பெயர்களும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டது.

   சான்றிதழ் சரிபார்ப்புக்குச் சென்றனர். பணி நியமனம் வழங்கவில்லை. தேர்வுசெய்து படித்திருந்தனர். இதனால் அவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இது பி.ஏ. ஆங்கில இலக்கியப் பாடத்திற்கு சமமானது என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதனால், தங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடக்கோரி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது.

    அரசு வக்கீல், "அரசு உத்தரவுப்படி பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை, பி.ஏ., ஆங்கில இலக்கியத்திற்கு சமம் என, பல்கலை கூறவில்லை என்றார். மனுதாரர் வக்கீல்,கோவை அவினாசிலிங்கம் பல்கலையில் பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை அரசு அங்கீகரித்து, பணி நியமனம் வழங்கியுள்ளது " என்றார்.

     நீதிபதி: நிகர்நிலை பல்கலையில் பி.ஏ.,நடைமுறை ஆங்கிலத்தை, பி.ஏ., ஆங்கில இலக்கியத்திற்கு சமமாக கருதும் அரசு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பாடத்தை மட்டும் ஏன் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். இது தவறு. மனுதாரர்கள் இருவருக்கும் பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும், என்றார்.