ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான முக்கிய விடைகள்தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து ஏராளமானோர் மனுக்களைஅளித்தனர். அந்த மனுக்கள் அந்தந்த பாட நிபுணர்களை வைத்துஆராயப்பட்டது.
மொத்தம் 150 முக்கிய விடைகளில் 4 விடைகளில் மட்டும் மாற்றம்இருக்கும்
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளுக்கான முக்கிய விடைகள்தொடர்பாக பெறப்பட்ட ஆட்சேப மனுக்கள் திங்கள்கிழமை பரிசீலிக்கப்படஉள்ளன.
இரண்டு தாள்களுக்கும் முக்கிய விடைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு,விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். அதன் பிறகு, அரசுடன்ஆலோசித்து வரும் வார இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தகுதி மதிப்பெண் குறைப்பு? ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகமானோர்தேர்ச்சி பெறாத சூழல் எழுந்தால், சில பிரிவினருக்கு தகுதிமதிப்பெண்ணை குறைப்பது குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம்ஆலோசனை நடத்தும் எனத் தெரிகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது. மாநிலம்முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் இரண்டு தாள்களையும்எழுதினர்.