முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு எந்த நேரத்திலும் வெளியாகும்: தேர்வு வாரிய தலைவர்


    பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரையில், முழுக்க முழுக்க தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், இடைநிலை ஆசிரிய நியமனம், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் இருந்து பதிவுமூப்பு மூலமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவு குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரியிடம் கேட்டபோது, ‘தகுதித்தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்வு முடிவு எந்த நேரத்திலும் வெளியாகும்’ என்றார்.


    தகுதித்தேர்வு மிகவும் கடினமான இருந்ததாகவும் விடை அளிக்க நேரம் போதாது என்றும் தேர்வு எழுதிய அனைத்து ஆசிரியர்களுமே புகார் தெரிவித்து இருந்தனர். இதற்கிடையில், தகுதித்தேர்வில் வெறும் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், 10 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்றும் வெவ்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

 ஏறத்தாழ 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப வேண்டியுள்ளதால், தகுதித்தேர்வில் தேவையான அளவுக்கு தேர்ச்சி வரவில்லை என்றால் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்? தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படுமா? டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள தகுதித்தேர்வு மூலம் எஞ்சிய காலி இடங்கள் நிரப்பப்படுமா? என்று தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குழம்பிப்போய் உள்ளனர். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) உத்தரவின்படி, தகுதித்தேர்வில், எஸ்.சி., எஸ்.டி. பி.சி., எம்.பி.சி. போன்ற இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீதம் வரை மதிப்பெண் குறைக்கலாம்.எனவே, போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதம் என்று நிர்ணயிக்கப்படலாம். அதற்கு மேல் குறைத்தால் பல்வேறு சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கருதுகிறது.