நாமக்கல்: கல்வி உதவித்தொகை தருவதில் முறைகேடு செய்துள்ளதாக நாமக்கல் மாவட்டத்தில் 81 தலைமை ஆசிரியர்கள் ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.1850 வழங்குவதில் முறைகேடு செய்த்துள்ளதாக தலைமை ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ,ஓர் ஆசிரியர் கூறுகையில், முழுமையான விசாரணைக்கு பின்பே தவறு நடந்துள்ளதா? என அறிய முடியும் என்று கூறினார் .