காமராஜர் - துளிகள்
பிறப்பு.... 1903 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் நாள்பெற்றோர்.... குமாரசாமி நாடார் - சிவகாமி அம்மாள்
இயற்பெயர் ... காமாட்சி
சிறப்புகள்
1954 முதல் 1963 வரை முதல்வர் பதவி
முதல்வர் பதவி ஏற்ற பின்பும் வாடகை வீட்டிலேயே வசித்தார்.
முதல்வர் பதவி ஏற்ற பின்பும் சொந்தமாக கார் கூட வாங்காதவர்.
முதல்வர் பதவி ஏற்ற பின்பும் தனது தாயாருக்கு மாதந்தோறும் ரூ.120 செலவுக்காக அனுப்பி வைத்தார்.
கருப்பு காந்தி என போற்றப்பட்டார்.
கிங் மேக்கர் என போற்றப்பட்டார்.
பணிகள்
மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார்.
நெய்வேலி நிலக்கரி வாரியம் கொண்டு வந்தார்.
பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை கொண்டு வந்தார்.
நீலகிரி பிலிம் தொழிற்சாலை கொண்டு வந்தார்.
திருவெறும்பூர் பாய்லர் தொழிற்சாலை கொண்டு வந்தார்.
ஆவடி கனரக வாகன தொழிற்சாலை கொண்டு வந்தார்.
பல்வேறு அணைகள் தமிழகத்தில் கட்டப்பட்டன.
மறைவு 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ந் தேதி.
மறைவின் போது சில கதர் ஆடைகளும் சில ரூபாய் நோட்டுகளும் மட்டுமே சொந்தமாக இருந்தது.