தேர்வுத்துறை இயக்குனரகம் நடத்தும் அனைத்து வகையான தேர்வுகளுக்கும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. செப்., - அக்., நடக்க உள்ள, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித் தேர்வு முதலே, இந்தத் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
அனைத்துமே இணையம்:சமீபத்தில், பிளஸ் 2 மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப் பட்டன. இந்த அனுபவத்தின் அடிப்படையில், மற்ற தேர்வுகளுக்கான நடைமுறைகளையும், இணையதளம் வழியாக கையாள, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.அதன்படி, அனைத்து வகையான தேர்வுகளுக்கும், மாணவ, மாணவியர் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறையை அமல்படுத்த, தேர்வுத்துறை முடிவெடுத்து உள்ளது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியரும், அந்தந்த பள்ளிகளில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
வரும் செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வில் இருந்து, இந்த புதிய திட்டம் அமலுக்கு வருகிறது. இதுகுறித்த விரிவான அறிவிப்புகளை விரைவில் வெளியிட, தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது.ஆலோசனை:புதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, தேர்வுத்துறை அதிகாரிகள், "நிக்' நிறுவன அதிகாரிகள் மற்றும் "டேட்டா சென்டர்' அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர்.
தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:தேசிய திறனாய்வு தேர்வு, பள்ளி பொதுத் தேர்வு, ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு, எட்டாம் வகுப்பு நேரடி தனித்தேர்வு, பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு, தனித்தேர்வு உட்பட அனைத்து வகை தேர்வுகளுக்கும், இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முடிவுகள், அதைத் தொடர்ந்து நடக்கும், மறு மதிப்பீடு, மறு கூட்டல் கோரி விண்ணப்பித்தல் உள்ளிட்ட இதர பணிகளையும், இணையதளம் வழியாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.
சுமை குறையும்:தேர்வுத்துறை எடுத்துள்ள இந்த அதிரடி சீர்திருத்தம் காரணமாக, அலுவலர்கள், ஊழியர்களுக்கு பணிச்சுமை கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப் படுகிறது. அதேசமயம், மின் ஆளுமைப் பணிகளில் உத்வேகத்துடன் ஈடுபட முடியாத ஊழியர்களின் திறன் வெளிப்படும்