ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மின்சாரக் கட்டணம் கட்டாமல் - நிலுவை உள்ளது - கூடுதல் நிதி தேவை விவரம் கோருதல்.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 9848 / சி 1 / 2012, நாள். 06.06.2012
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடிதத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மின்சாரம் கட்டாமல் நிலுவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே 16.06.2012 அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் மின்கட்டணம் தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளதால் அக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இயக்குநருக்கு சமர்ப்பிக்க அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது.