முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

கம்ப்யூட்டர் ஆசிரியர் மற்றும் சத்துணவு பணியாளர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்வதல். பிரிவு கண்காணிப்பாளர் பதவி உயர்வு, இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பதவி உயர்வு கவுன்சிலிங், 21ம் தேதி முதல் நடைபெறுகிறது.
டி.ஆர்.பி.தேர்வு மூலம் தேர்வான, 185 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங், 21ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
பதவி உயர்வு மூலம்பிரிவு கண்காணிப்பாளர்களாக பணி நியமனம் செய்யப்படும், 75 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10.30 மணிக்கும்இருக்கைப் பணி கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெறும், 45 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10 மணிக்கும் நடைபெறுகிறது.
சத்துணவு பணியாளர்களில்பட்டதாரி ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு, 136 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், 23ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
டி.என்.பி.எஸ்.சி.மூலம்பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 36இளநிலை உதவியாளர் மற்றும் 16 தட்டச்சர்களுக்கு பணி நியமனம் வழங்கும் கவுன்சிலிங், 23ம் தேதி பகல் மணிக்கு நடக்கிறது.
அனைத்து கவுன்சிலிங் நிகழ்ச்சிகளும்சென்னைடி.பி.ஐ.வளாகத்தில் உள்ள மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நடக்கும் எனபள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். கவுன்சிலிங் நிகழ்ச்சி நிரல் விபரம்