அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்கள் பட்டம் பெற்றுள்ள பாடத்தில், எட்டு பாட வேளைகளில் கற்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், வாரத்திற்கு 10 பாட வேளைகள் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் பலர், தங்களது அலுவலகப் பணிகளை மட்டும் பார்த்துவிட்டு, மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை செய்வதில்லை.
வாரத்திற்கு 10 பாட வேளைகளில், நீதி போதனை பாட வேளைகள் ஒதுக்கீடு செய்து கொள்வர். இந்த பாட வேளைகளில் கற்பித்தல் பணிகளை பலர் செய்வதில்லை. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் மணி விடுத்துள்ள சுற்றறிக்கையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாரத்திற்கு 10 பாட வேளை, மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை தவறாது செய்ய வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் எந்த பாடத்தில் பட்டம் பெற்றுள்ளனரோ அந்த பாடத்தில் குறைந்தபட்சம் எட்டு பாட வேளைகளாவது மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மீதி இரண்டு பாட வேளைகள், நீதி போதனை போன்ற பாடங்களை கற்பித்துக் கொள்ளலாம். இதை, அனைத்து தலைமை ஆசிரியர்களும் தவறாது பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Courtesy : Dinamalar