போட்டித் தேர்வில், தேர்வு செய்யப்பட்ட 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (ஏ.இ.இ.ஓ.,) மற்றும் 33 முதுநிலை விரிவுரையாளர் ஆகியோருக்கு, வரும் 18ம் தேதி டி.ஆர்.பி., அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
மாநில ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 33 முதுநிலை விரிவுரையாளரை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு, மார்ச் 4ம் தேதியும், தொடக்க கல்வித்துறையில் பணியாற்ற 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலரை தேர்வு செய்வதற்கான தேர்வு, பிப்ரவரி 26ம் தேதியும் நடந்தன. இதன் முடிவுகள், கடந்த 6ம் தேதி வெளியானது.
இரு தேர்வுகளிலும், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, 18ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதில், ஏதாவது பிரச்னை இருந்தால், சம்பந்தப்பட்ட தேர்வரின் தேர்வு உத்தரவு நிறுத்தி வைக்கப்படும்.
கல்வித் தகுதி மற்றும் சான்றிதழ்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், இறுதி தேர்வர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு டி.ஆர்.பி. அனுப்பி வைக்கும். 67 பேருக்கும், இம்மாத இறுதிக்குள் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும் என தெரிகிறது.