Thursday, June 21, 2012
ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ள ஜூலை 12ம் தேதி அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் களாக பணி நியமனம் பெற விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. ஏற்கெனவே இந்த தேர்வு ஜூன் 4ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக இந்த தேர்வு ஜூலை 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 6. லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இதற்காக 1400 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடக்கும் நாள் பணி நாளாக உள்ள தால் பள்ளிகள் இயங்கும். மேலும் ஆசிரியர்களும் தேர்வு எழுதுகின்றனர். அதனால் அன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. விடுமுறை விடும் நாளுக்கு பதிலாக வேறு ஒரு நாளில் பள்ளிகள் நடத்த வேண்டும். இது சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்தும்.