மாணவர் சேர்க்கைக்காக கிராமங்களை முற்றுகையிடும் கல்வி நிறுவனங்கள்
நகரங்களில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள், வாகனங்களில் ஒலி பெருக்கியுடன் துண்டு பிரசுரம் வினியோகித்து, கிராமங்களை முற்றுகையிட்டு உள்ளனர்.
அதிகளவில் குக்கிராமங்கள் உள்ளதாலும், திருப்பூர், கேரளா, சென்னை கோயம்பேடு உட்பட பல இடங்களில் வேலை செய்தாலும் தங்களின் குழந்தைகளின் கல்வித் தரம் உயர வேண்டுமென கடந்த, 10 ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் விழிப்புணர்ச்சியோடு உள்ளனர்.அதிக பணம் செலவானாலும், தரமான கல்வி நிறுவனங்களில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புகின்றனர். இதனால் நிலம், வீட்டுமனை, தங்கம் வாங்குவதை தவிர்த்து குழந்தைகளின் கல்விக்கு தாராளமாக செலவு செய்ய பெற்றோர் தயாராக உள்ளனர்.
இதை பயன்படுத்தி கிராமப்புறங்களில் வெளி மாவட்ட கல்வி நிறுவனங்கள் முற்றுகையிட்டு மும்முரமாக சேர்க்கைப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.