முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

முதுநிலை ஆசிரியர் பணிக்கு ஜூலை 21ல் எழுத்து தேர்வு.

முதுநிலை ஆசிரியருக்கான 2,881 காலி பணியிடங்களை நிரப்ப ஜூலை 21ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி), 2012&2013ம் ஆண்டு முதுநிலை உதவியாளர் மற்றும் உடற்கல்வி டைரக்டர் கிரேடில் காலியாக உள்ள 2881 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. தமிழ் பாடப்பிரிவில் 605 இடம், ஆங்கிலம் 347, கணிதம் 288, இயற்பியல் 228, வேதியியல் 220, தாவரவியல் 193, விலங்கியல் 181, வரலாறு 173, புவியியல் 21, பொருளாதாரம் 257, வணிகம் 300, அரசியல் அறிவியல் 1, ஹோம் சயின்ஸ் 1, உடற்கல்வியியல்(டைரக்டர் கிரேடு 1), 17, மைக்ரோ பயாலஜி 31, பயோ கெமிஸ்டிரி 16, தெலுங்கு 2 இடமும் இடம் பெற்றுள்ளன. ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி/டிஎன்சி, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி ஜாதிவாரிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்ஏ, எம்எஸ்சி, எம்.காம் பட்டப்படிப்புடன் பி.எட் படித்திருக்க வேண்டும். இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் மே 31ம் தேதி முதல் வினியோகிக்கப்படுகிறது. 32 மாவட்டங்களில் உள்ள தலைமை கல்வி அதிகாரி அலுவலத்தில் ரூ.50 செலுத்திவிண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 14ம் தேதி மாலை 5.30 மணி வரை அனுப்பலாம். ஜூலை 21ம்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை எழுத்து தேர்வு நடைபெறும். 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். தேர்வு கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துதெரிந்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.