முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

பாஸ்போர்ட் பெற "ஆதார்' சான்றாகிறது


ஆதார் அடையாள அட்டையை, பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான இருப்பிட மற்றும் அடையாள சான்றாக பயன்படுத்தலாம் என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பின்போது, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் அட்டை போன்றவை, இருப்பிட மற்றும் அடையாள சான்றுகளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இவற்றுடன் தற்போது, ஆதார் அடையாள அட்டையையும், பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான இருப்பிட மற்றும் அடையாள சான்றாக பயன்படுத்தலாம் என, வெளியுறவுத் துறை அமைச்சம் அறிவித்துள்ளது. சாதாரண மற்றும் தத்கல் முறை விண்ணப்பங்களுக்கு, இந்த அறிவிப்பு பொருந்தும். சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இத்தகவலை தெரிவித்துள்ளது.