சென்னை: ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும் 12ம் தேதி துவங்க உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலியில், ஆறு அரசு சட்டக் கல்லூரிகளில், 2012- 13ம் கல்வியாண்டுக்கான, ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., படிப்புக்கு, மே 28ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.
ஐந்தாண்டு படிப்பிற்கு, 1,052 இடங்கள் உள்ள நிலையில், 4,000த்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதில், வயது, மதிப்பெண் குறைவு மற்ற குறைபாடுகள் காரணமாக, 650க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 3,384 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இவர்களுக்கான கலந்தாய்வு, சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலையில் வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது என பல்கலை பதிவாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.