அரசு அறிவிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு முன் சரியான காலிப் பணியிட விவரங்களை அறிய , கட்டாய கல்விச் சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் மாணவர் விகிதம் நிர்ணயிக்கப்பட்டு , உபரி ஆசிரிய பணியிடங்கள் காலி பணியிடங்களுக்கு மாற்றப்பட்டு. இப்பணி இட நிரவல் முடிந்த பின்பு சரியான காலிப் பணி இடங்களைக் கொண்டு மாறுதல் கலந்தாய்வு நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக அறியப்படுகிறது . இதே போல் பள்ளிக்கல்விதுறையில் உள்ள பட்டதாரி ஆசிரிய பணியிடங்களும் நிரவப்படுகிறது. மீதம் உள்ள பணியிடங்களை இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை மாநில பதிவு மூப்பு அடிப்படையிலும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும் நியமிக்கப்பட உள்ளனர். விரைவில் இவர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தேதி நம் இணைய தளத்தில் வெளியிடப்படும் .