சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் முதன்முறையாக நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் தேர்ச்சி விகிதம் 86.20; கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 85.30 5 லட்சத்து 26 ஆயிரத்து 790 மாணவர்கள் மற்றும் 5 லட்சத்து 24 ஆயிரத்து 132 மாணவியர் உட்பட மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரத்து 922 பேர் தேர்வு எழுதினர். அதில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 391 மாணவர்கள் மற்றும் 4 லட்சத்து 66 ஆயிரத்து 147 மாணவியர் உட்பட 9 லட்சத்து 5 ஆயிரத்து 538 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 83.40 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவியர் தேர்ச்சி விகிதம் 88.90.
கணிதப்பாடத்தை பொறுத்தவரை, கடந்தாண்டை விட இந்தாண்டு நூறு சதவீத மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.கடந்தாண்டு 12 ஆயிரத்து 532 பேர் நூறு சதவீத மதிப்பெண் எடுத்திருந்த நிலையில், இந்தாண்டு ஆயிரத்து 141 பேர் மட்டுமே கணிதப்பாடத்தில் நூறு சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அதேசமயம், கடந்தாண்டு 3 ஆயிரத்து 677 பேர் மட்டுமே நூறு சதவீத மதிப்பெண் எடுத்திருந்த நிலையில், இந்தாண்டு ஆறிவியல் பாடத்தில் 9 ஆயிரத்து 237 பேர் சதமடித்துள்ளனர்.வெறும் 756 பேர் மட்டுமே கடந்தாண்டு நூறு சதவீத மதிப்பெண் பெற்றிருந்த நிலையில் இந்தாண்டு சமூக அறிவியலில் 5 ஆயிரத்து 305 பேர் நூறு சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.