மாணவர்களை விட  மாணவியர் சாதனை
      சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 7.56 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற, பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களில், 86.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட, வெறும் 0.8 சதவீதம் தான் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், மாணவர்களை விட, வழக்கம் போல் மாணவியர், கூடுதலாக, 6.5 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவியரில், 89.7 சதவீதம் பேரும், மாணவர்கள், 83.2 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்